கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்பு! பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் 41 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வெளியில் பணி செய்யும் நபர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முடிந்தளவு நீர் பருக வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

அதிக வெப்பம் காரணமாக யாருக்காவது வாந்தி, மயக்கம் அல்லது உடலில் சக்தி இல்லாதது போன்று உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை சந்திக்க வேண்டும் என திணைக்களம் மக்களை கேட்டுள்ளது.

முகநூலில் நாம்