கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று 16 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 11 மணிமுதல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பகுதியில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்