கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றவியல் பிரிவும் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

அத்கமைய வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடமும் கட்டுமானப் பணிகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலையின் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து குறித்த கைக்குண்டு நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்