கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான தகவல்!

கொழும்பில் காணிகளின் விலை நூற்றுக்கு 10.4 வீதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் காணி மதிப்பிட்டிற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டின் அரையாண்டுக்கான நில மதிப்பீட்டு அட்டவணை 138.9 ஆக மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2018 ஆம் ஆண்டின் அரையாண்டுடன் ஒப்பிடும் போது 10.4 வீத வளர்ச்சியைக் குறிக்கிறது. குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று குறியீடுகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே இந்த அதிகரிப்பிற்கு காரணமாகியுள்ளது.

முகநூலில் நாம்