கொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையில் ஓர் அதிவிசேட அறிவிப்பு

இலங்கையில் கொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையிலான அதிவிசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொழும்பிற்கு வருபவர்கள் முகத்தை மறைக்கும் துணியிலான கவசத்தை அணியுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல இடங்களில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் தன்மையை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை இலங்கை சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு எச்சரிக்கை அறிவித்தல்களை மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே முகத்தை மறைக்கும் துணியிலான கவசத்தை அணியுமாறு கொழும்பு வருபவர்களுக்கு கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜமுனி அறிவுரை வழங்கியுள்ளார். கொழும்பில் அதிகளவில் சீனப் பிரஜைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்