கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று நீர் வெட்டு

கொழும்பில் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது,.

அதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.

மேலும் 1 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்