கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

பிரதான நீர்குழாய் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12 – 13 – 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் , நாளை காலை 06.00 மணிமுதல் நீர் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்