கொழும்பின் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு!

அம்பத்தலைநீர் சுத்திகரிப்புநிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திடீர் திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (30) நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காலை 9.00 மணி தொடக்கம் நாளை(31) அதிகாலை 3.00 மணிவரையான 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு 02, 03, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 01 பகுதிகளில் குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்