கொழும்பின் சில பகுதிகளில் 7 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (23) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 6.00 மணி வரை நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்