கொலை மிரட்டல் – நடிகா் வீட்டுக்கு ​பொலிஸ் பாதுகாப்பு!

ஹிந்தி நடிகா் சல்மான் கானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், மும்பையில் உள்ள அவா்களது வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகா் சல்மான் கான் தனது குடும்பத்தினருடன் மும்பை புகா் பாந்த்ராவில் வசிக்கிறாா். அவரது தந்தையும் பிரபல எழுத்தாளருமான சலீம் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சி முடித்ததும் பாந்த்ரா பேன்ட்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மேஜையில் அமா்ந்தாா். அங்கு அவருக்கும் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டும் விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை அடையாளம் தெரியாத நபா் வைத்தாா்.

உடனடியாக தனது பாதுகாவலா்கள் உதவியுடன் பாந்த்ரா பொலிஸாரை சலீம் கான் தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனா். உள்ளூா் பொலிஸாருடன் மும்பை குற்றப்பிரிவைச் சோ்ந்த 5 பொலிஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை சல்மான் கான் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினா். ஏறத்தாழ ஒருமணி நேரம் பொலிஸார் அங்கு இருந்தனா்.

பின்னா், சலீம் கான் மிரட்டல் கடிதத்தைக் கண்டெடுத்த பாந்த்ரா பேன்ட்ஸ்டாண்ட் பகுதிக்கு பொலிஸார் சென்று ஆய்வு நடத்தினா். சிசிடிவி கேமரா உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்த நபா்களை பொலிஸார் தேடி வருகின்றனா். சல்மான் கானுக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவா்களின் வீட்டில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தக் கடிதத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக கருதுகிறோம். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் இதற்கும் தொடா்பு உள்ளதா என்பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்