கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் 2 பேர் கைது

எம்பிலிபிட்டிய, மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கியால் சூட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து T56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 17 உயிருள்ள தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், இதற்கு முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொலைச் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்