கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து – 9 வீரர்கள் பலி!

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதனால் சில சமயங்களில் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினர் மீது ஏவுகணைத்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் குவாய்வியார் மாகாணத்தில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் நேற்று ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது ஒரு பிளாக்ஹாக் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டரில் 17 வீரர்கள் பயணம் செய்தனர்.வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இனிடிடா ஆற்றுப்பகுதியை கடந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியை மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது இனிடிடா ஆற்றுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதை மீட்புப்படையினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். மேலும், 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கு கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல் காரணமா? அல்லது தொழில்நுட்பக்கோளாறா? என்ற தகவலை தெரிவிக்க கொலம்பிய ராணுவம் மறுத்துவிட்டது.

முகநூலில் நாம்