கொரோனா வைரஸ் தொற்று பீதி: தலைமையகத்தை மூடியது பிசிசிஐ

உலகளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மும்பையில் உள்ள தலைமையகத்தை மூடியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். மேலும், ஊழியர்கள் வேலைகளை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்