கொரோனா வைரஸ் தொற்று! சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுத்தேர்தல் கூட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுக் கூடல்களை தவிர்ப்பது தொடர்பில் தற்போதைக்கு முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லைஇலங்கையை பொறுத்தவரையில் இந்த விடயத்தில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

சுமார் 10,000 சீன தொழிலாளர்கள் இலங்கையில் பணியாற்றுகின்ற போதும் இந்த தொற்றை இதுவரை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கிறது.இதேவேளை முகக்கவசங்களை அணிவது தொடர்பில் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை பார்வையிட செல்வோரை தவிர ஏனையவர்கள் கரிசனை கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்