கொரோனா வைரஸ் தாக்கினால் எத்தனை நாட்கள் வைரஸ் உடலில் இருக்கும்? அதிர வைக்கும் தகவலை வெளியிட்டது சீனா

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் என்றும் சீன மருத்துவர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் மற்றும் அதன் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவலை இன்று வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் வுகானில் உருப்பெற்ற கொரோனா தற்போது சர்வதேச நாடுகளை துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. எனினும் சீனாவிற்குள் அதன் தாக்கம் குறைந்து செல்கிறது.

இந்நிலையில், இலங்கையிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோயால் உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

முகநூலில் நாம்