
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான போலியான தகவல்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவரின் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவரான அவருடன் கொரோனா வைரசால் பாதிக்கபட்ட அவரின் தந்தை மிகவும் குறைந்தபட்ச தொடர்பையே கொண்டிருந்தார் என சுகாதார அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குறித்த மாணவன் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக எந்தவொரு தரப்பினரும் அச்சம் அடையத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.