கொரோனா நோயாளிக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது நாசா

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்காக உள்நாட்டில் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவிகளை) வடிவமைத்து தயாரிப்பதற்கான உரிமத்தை 3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வழங்கி உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், புனேயில் இருக்கிற பாரத் போர்ஜ், ஐதராபாத்தில் செயல்படுகிற மேதா சர்வோடிரைவ்ஸ் ஆகியவையே அந்த நிறுவனங்கள்.

மேலும், 18 பிற நிறுவனங்கள் முக்கியமான சுவாச உபகரணங்களை தயாரிக்க நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 8 நிறுவனங்கள் அமெரிக்காவிலும், 3 நிறுவனங்கள் பிரேசிலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

முகநூலில் நாம்