கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (27) 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேரும் கத்தாரிலிருந்து நாடு திரும்பிய ஐவரும் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்புய ஒருவரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 2,121 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முகநூலில் நாம்