கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக பதிவானது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் (24) 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேலும் 14 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்

அதற்கமைய இதுவரை 1,562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

முகநூலில் நாம்