கொரோனா நிவாரண நிதிக்கு ஆறு மாதம் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார் பஜ்ரங் புனியா

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது, 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


இன்று 2-வது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு நிதியாக வழங்கலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறுமாத சம்பளத்தை அம்மாநில முதல்வர் எம்.எல். கட்டார் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பஜ்ரங் புனியா ரெயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இதில் கிடைக்கும் ஆறுமாத சம்பளத்தைதான் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முகநூலில் நாம்