கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி!

நாட்டில் கொரோனா தொற்று பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி இன்று இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முகநூலில் நாம்