கொரோனா தொற்று நிலையில் ஆபத்தான கட்டத்தில் புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கொரோனா தொற்று நிலையில் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்வதாக சுகாதாரத்தரப்பு எச்சரித்துள்ளது.
கடந்த நாள்களில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தொற்றை அறியும் பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன என புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகளின் படி புதுக்குடியிருப்பில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவகின்றனர். இன்றும் பலர் அறிகுறிகளுடன் வீடுகளுக்குள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் நாட வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில், அதிகளவாக கொரோனா தொற்றும் பிரதேசமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (25) 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில். 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலைமை தொடருமானால், குறுகிய காலத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் கொரோனா தொற்றால் மோசமான நிலைமை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆகவே, தொடர்ந்து வரும் நாள்களில் குறைந்தது இரண்டு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம் என்றும், எம்.கெங்காதீஸ்வரன் கேட்டுக்கொண்டார். (நன்றி:TM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்