
ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 115 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எனினும், கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஹோமகம போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான உதவிகளை வழங்க புதிய இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டிலேயே குறித்த இயந்திரம் தயாரிக்கப்பட்டதுடன், அட்லஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயற்படக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிருமிகளை ஒரேதடவையில் நீக்கும் இயந்திரத்தினை ஸ்ரீலங்கா கடற்படையினர் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.