கொரோனா தாக்குதல் – இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி.
இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகி விட்டனர்.

இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அதிகரித்து இருக்கிறது. 35,713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 475 பேர் பலியானது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

முகநூலில் நாம்