கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதுவர்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கல் முறையை கையாட முனைந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளது.

ரஷ்ய புலனாய்வு சேவைகள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரி கெலின் (Andrei Kelin) தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பமுடியாதிருப்பதாகவும் முட்டாள்தனமானது எனவும் BBc க்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கும் நிறுவனங்களை, ஊடுருவலாளர்கள் இலக்கு வைத்துள்ளதாக, பிரித்தானிய பாதுகாப்பு சேவைகள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தது.

இந்த ஊடுருவலாளர்கள் ரஷ்ய புலனாய்வுசேவைகள் நிறுவனத்தின், ஒரு பகுதியாக இயங்குவதாகவும் அது தெரிவித்திருந்தது.

இதேவேளை, பிரித்தானிய அரசியலில் தலையீடு செய்ததாக ரஷ்யா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரி கெலின் நிராகரித்துள்ளார்.

முகநூலில் நாம்