கொரோனா தடுப்பு நடவடிக்கை – பிசிசிஐ ரூ. 51 கோடி, சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா வைரசால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசுக்கு வழங்கலாம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். 
இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதேபோல், சிஎஸ்கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 52 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 
பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு 31 லட்ச ரூபாயும், உத்தரபிரதேச முதல்மந்திரியின் நிவாரண நிதி கணக்கிற்கு 21 லட்ச ரூபாயும் (மொத்தம் ரூ. 52 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முகநூலில் நாம்