கொரோனா சிகிச்சைக்காக ஜப்பான் மருத்துவ உதவி

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5,000 மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.

குறித்த மருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடையும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கிற்காக பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்காக சீனா, உபகரணங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.

குறித்த உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

முகநூலில் நாம்