கொரோனா ஒழிப்புத் திட்டத்துக்கு சீனா பாராட்டு!

இம்மாதம் (20) வரவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி , ஜீ பின்க் பிங் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக இலங்கை முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில், இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவரான ஹூ வெயி சீன ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இன்று (18) கையளித்தார்.

அத்தோடு, கொ​ரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கா சீனா அனுப்பிவைத்துள்ள உதவிப் பொருள்கள் தொடர்பான ஆவணமொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் சீனாவும் ஒரே வகையான நடவடிக்கைகளையே பின்பற்றியதாகவும், நாட்டிப் பாதுகாப்பு படையினரின் உதவியுடனேயே மேற்படி அச்சுறுத்தலை வெற்றிகொள்ள முடிந்ததெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்