கொரோனா அச்சம் !வடக்கில் பல பகுதிகளில் சுகாதார நடவடிக்கை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முகநூலில் நாம்