கொரோனா அச்சம் – நல்லூரானின் பிரதான வாயிலில் இரும்புக் கதவு!

நாட்டு மக்களிடையே கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ தாக்கமானது தற்பொழுது இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலய வாயில் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்