
இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவும் காய்ச்சலால் பிரான்ஸில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஐந்தாவது வாரத்தில், அனைத்து பெருநகரங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. காய்ச்சல் காரணமாக 810 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அனைத்து பிராந்தியங்களும் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளன.
இந்த வார அறிக்கையின் படி, இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 15 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள், 15-64 வயதுடையவர்களில் 12 பேர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரும் அடங்குவர்’ என பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனியை ஒட்டி அமைந்துள்ள செக் குடியரசு நாட்டிலும் இந்த வைரஸ் நோயினால் 12 பேர் பலியாகினர். சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனோ வைரஸ் உலகையே ஆட்டங்காண வைக்கின்றது. கொரோனா வைரஸினால் இதுவரை 500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவும் காய்ச்சலாலும் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமை உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.