கொரோனாவை தடுக்க இன்று முதல் நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதியத் திட்டம்!

உலகையே அச்சுறுத்தலிற்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தற்பொழுது , இலங்கையிலும் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக இன்று முதல் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்