
கொரோனா வைரஸால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை எழுந்துள்ளது. தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மக்களுக்கும் தற்போது பொழுதுபோக்கு என்றால் தொலைக்காட்சி தான்.
சினிமா, சீரியல் தொழில்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில் டிவி சானல்கள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளையே மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கிவிட்டனர்.
ஏற்கனவே தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக இன்று இரவு 8 மணி முதல் ஷாருக்கான் நடித்த சர்க்கஸ் சீரியலை மறு ஒளிபரப்பு செய்ய முடிவுசெய்துள்ளனராம்.
நம்ம ஊர் சீவகார்த்திகேயன் போல சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் ஷாருக்கான்.
1989 ம் ஆண்டு வெளியானதே இந்த சர்க்கஸ் சீரியல். 19 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியலில் சுனில் ஷிண்டே, ரேகா ஷாய், சமீர் கட்கர் என பலர் நடிக்க ஆஸிஸ் மிஸ்ரா இயக்கியிருந்தார். நலிந்து போன சர்க்கஸ் கம்பெனியை வெளிநாட்டில் படித்த சர்க்கஸ் முதலாளியின் மகன் மீட்கிறான் என்பதே இந்த கதை.
இதுகுறித்து ஷாருக்கான் மக்களே வீட்டில் இருங்கள், உங்கள் அன்புகுரிய சேகரன் வருகிறான் என பதிவிட்டுள்ளார்.