கொரோனாவில் இருந்து தப்பிக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய ஏற்பாடு

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் விமான பயணிகளை விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 4 ஸ்கேனர் இயந்திரங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்