கொரோனாவின் ’உக்கிரம் குறைகிறது’

கடந்த 15 தினங்களில், கொரோனை வைரஸ் தொற்றுக்கு ஆளான 149 அடையாளம் காணப்பட்டிருந்தாலும், 633 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனரென, சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெறுவோர் தொகை, சீக்கிரமாகவே குறைவடைந்து வருவதாகவும் கடந்த 3 தினங்களில், எந்தவொரு தொற்றாளரும் அடையாளம் காணப்படாமை சிறப்பம்சமாகும் என்றும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தார்.

தற்போது வரையில், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,950ஆக உள்ளபோதும் அவர்களில் குணமடைந்துச் சென்றவர்கள் தொகை 1,498ஆகப் பதிவாகியுள்ளதெனவும் இது, 76.8 சதவீதமாக அமையுமென்றும் கூறினார்.

மேலும், 441 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவர் மாத்திரமே அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 21 தினங்களில், ஜூன் (2) மாத்திரமே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அன்றைய தினம் 79 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குணமடைந்துச் செல்வோர் தொகை அதிகரிப்பதையிட்டு, கடந்த (15) 484 கட்டில்கள் வெறுமையாகி உள்ளனவெனவும் தெரிவித்தார்.

முகநூலில் நாம்