
கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் கொய்கா திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் தலைமையில் ஜோய் பியசீலன் தலைமையில் இடம்பெற்றது.
32 பாடசாலைகளுக்கு சுமார் 270 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அந்த வகையில் இன்று 26.07.2022 கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வகுப்பறைக்கட்டிடம் ஆய்வுகூடம், நூலகம் அடங்கலான அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2014 ஆண்டிலிருந்து கல்விக்கான உதவிகளைகொரிய அரசு மிகவும் திறம்பட செய்து வருகிறது என்று கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்வில் முன்னதாக பிரதம விருந்தினர்களை பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியம் மற்றும் காவடி, கும்மி போன்ற கிராமிய கலைகளோடு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து கொய்கா திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் பெயர்ப்பலகையை வடமாகாண ஆளுநர் மற்றும்
கொரியத் தூதுவர் இணைந்து திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கைக்கான கொரிய நாட்டுத்தூதுவர் H.E SANTHUSH WOONJIN JEONG, யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி EMMA BRIGNAM, வடமாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கொய்கா திட்டத்தின் பிரதிநிதிகள், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வலயக்கல்விப்பணிப்பாளர், ஆசிரியர்கள்
பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




