கொரானா பரவலை கட்டுப்படுத்தல்;இலங்கை முன்னிலையில்!

பெரும் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாடுகளையும் மிஞ்சி கொரொனா வைரஸ் கட்டுபாடு செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பெண்டிஷே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொற்று நோய் பரவல் தொடர்பான கண்காணிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க ந​டைமுறைப்படுத்தியுள்ள திட்டம் சாத்தியமளித்துள்ளதென தெரிவிதுள்ள அவர், அதற்கான தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளா​ர்.

உரிய நேரத்தில் வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை இலங்கை வைத்திய நிபுணர்கள் முன்னெடுத்திருந்தனர் எனவும், பரிசோதனை, வைத்திசயாலைகளை புதிதாக நிறுவல் உள்ளிட்ட செயற்பாடுகளில் இலங்கையின் செயற்பாடு பாராட்டதக்க வகையில் இருந்ததெனவும் தெரிவித்தார்.

அத்தோடு வெளிநாட்டில் இருப்பவர்களை அ​ழைத்துவந்து அவர்களை தனிமைப்படுத்தி சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்துடன் மற்றைய தரப்புகள் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுகுள் வந்திருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறிருக்கும் போது கொரோனா வைரஸின் நடத்தையை சரியாக அறிந்துகொள்ள நாம் ஒன்றுபட வேண்டியது அவசியமென கேட்டுக்கொண்டுள்ள அவர், அந்த வைரஸிலிருந்து விடுபட்டு வழமைக்கு திரும்புவதற்கான இயலுமை மந்த நிலையிலேயே காணப்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்