கையடக்க தொலைபேசி தரவுகளை அழித்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இளைஞன்

தலாத்துஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுனகடை பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன் ஆலயம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

அவரது கையடக்க தொலைபேசிகளில் இருந்த அனைத்து தகவல்களும் அழித்த பின்னரே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பல்வேறு நபர்களிடம் அவர் பணம் பெற்றுள்ளதாகவும் அதனை செலுத்த முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தலாத்துஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்