
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி இயக்குநர் கே.வி. அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பிரின்ஸ்’.
சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். இவருடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே தருணத்தில் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபாவளி திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் ஒன்றாம் திகதியான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பிம்பிலிக்கி பிளாப்பி..’ எனத் தொடங்கும் இந்த பாடலலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை இசை அமைப்பாளர் அனிருத், பின்னணி பாடகிகள் ரம்யா பிகாரா, சஹிதி ஜகன்டி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
தமன் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் துள்ளலிசையாக அமைந்திருப்பதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களின் சிங்கிள் ட்ராக் துள்ளல் இசையாகவே அமைந்திருந்தது இந்த இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ‘பிரின்ஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கும் துள்ளலிசையாகவே அமைந்திருக்கிறது.
இந்த சென்டிமென்டின் காரணமாகவே சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் பாடல்களும், படமும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.