கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் யாழில் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்