
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த
முடியாது என அதன் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தமது
பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூட்டமைப்பின்
பெயரை பயன்படுத்த கூடாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டதாக
சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அமைந்துள்ள புதிய கூட்டணியில் கூட்டமைப்பின் பெயர்
பயன்படுத்தப்பட்டமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுமந்திரன்
குறிப்பிட்டுள்ளார்.