குறையும் கொரோனா – மூடப்பட்ட சினிமா தியேட்டர்களை மீண்டும் திறக்கும் சீனா!

தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வைரஸ் பரவத்தொடங்கியபோது மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு பகுதிகள் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வைரசின் தாக்கம் குறைந்ததையடுத்து, மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர்.

தியேட்டரில் உள்ள மொத்த இருக்கையில் 30 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்