குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஜனாதிபதி கோட்டபாய அறிவித்த நிவாரணம்!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு உட்பட நிவாரண பொதியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இலவச பொதி தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள் தொடர்பிலான தகவல் பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக் கொண்டு அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்