குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி வழங்கவுள்ள மேலும் ஒரு சலுகை…!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி கருவிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மின்சார வசதியில்லாத 12,500 குடும்பங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்