குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வர தடை!

கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை முதல் 14 நாட்களுக்கு இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிசார சபையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் இருந்து இலங்கை வரவிருந்த இறுதி விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த தடை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்