குத்துச்சண்டை: விகாஸ் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்- அமித், லோவ்லினா வெண்கல பதக்கம் வென்றனர்

ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் ஒலிம்பிக் ஆசிய தகுதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் சீனாவைச் சேர்ந்த ஜியான்குயன் ஹுவை எதிர்கொண்டார். இதில் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

52 கிலோ எடைபிரிவு அரையிறுதி போட்டியில் அமித் பங்கல் தோல்வியடைந்தார். இதனால் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் 69 கிலோ எடைபிரிவில் லோவ்லினா போர்கோகைன் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். மூன்று பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முகநூலில் நாம்