
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது.
பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை எளிதில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
அத்துடன் அவர் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பையும் உறுதி செய்தார். 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் மோங்ஹோர்ன் நமுனை தோற்கடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.