
காசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காசாவின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

