‘குடு சந்தா’ ஹெரோயினுடன் கைது

தொட்டலங்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் ´குடு சந்தா´ என்று அழைக்கப்படும் தினேஷா சந்தமாலி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அவரிடம் இருந்து 26 கிராம் ஹெரோயின், 6 கைப்பேசிகள் மற்றும் 10 வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்