குடியரசுக் கட்சி குற்றச்சாட்டுகிறது   அமெரிக்காவை விட்டு வெளியேறியோர் வாக்களிப்பில்

TOPSHOT – Voters wear face-coverings while waiting in line to vote for the 2020 US elections at the Los Angeles County Registrar in Norwalk, California on November 3, 2020. – The United States started voting Tuesday in an election amounting to a referendum on Donald Trump’s uniquely brash and bruising presidency, which Democratic opponent and frontrunner Joe Biden urged Americans to end to restore “our democracy.” (Photo by Frederic J. BROWN / AFP)

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படுவதில் தொடர்ந்தும் இழுபறிகள் நீடிக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான, நேவாடா மாகாணத்தின் வாக்கு என்னும் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அம்மாகாணத்தின் குடியரசுக் கட்சியினரால் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் ஏறக்குறைய 3062 வாக்கு மோசடி சம்பவங்கள் இடம்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேவாடா மாகாண குடியரசுக் கட்சியினரால் அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார்’க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கட்சியினரால் ருவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசித்தவர்கள் பலரும் குறித்த தேர்தலின் பொது தமது வாக்குகளை பதிவு செய்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேவாடா மாகாணத்தின் வாக்கெண்ணும் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

இதுவரையில் எண்ணப்பட்டுள்ள 89 வீதமான வாக்குகளின அடிப்படையில் ஜோ பிடன் 11 ஆயிரத்து 400 வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்